--- --:--:-- --

கால்வாயில் விழுந்த நாயை காப்பாற்றிய இளைஞர்கள்..!

9

பிலிப்பைன்ஸ் நாட்டில் காயத்துடன் கால்வாய்க்குள் விழுந்த நாயை இரு இளைஞர்கள் பத்திரமாக மீட்டனர். 6 குட்டியை ஈன்ற நாய் ஒன்று கிட்டத்தட்ட 15 அடி ஆழம் கொண்ட கால்வாயில் விழுந்து கிடந்தது. இதனை கண்ட இரு இளைஞர்கள் அதனை மீட்க முயற்சித்தனர்.

 

கால்வாயின் ஆழம் அதிகமாக இருந்ததால் ஒரு இளைஞர் மட்டும் அதனுள் இறங்கி காயத்துடன் கிடந்த நாயை பத்திரமாக தூக்கிக் கொண்டு வந்தார். பின்னர் மீட்கப்பட்ட அந்த நாய் பிளாஸ்டிக் கூடையில் வைக்கப்பட்ட கால்வாயின் மேற்பகுதிக்கு இளைஞர்களால் தூக்கிச் செல்லப்பட்டது. இளைஞர்களின் செயலை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்.

Leave a Reply

Right Menu Icon