--- --:--:-- --

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..!

8

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மேலும் கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Reply

Right Menu Icon