திருவாடானையில் ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய இளைஞர்கள்!
ராமநாதபுரம் மாவட்டம். திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே பாண்டுகுடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திணையத்ததூரில் உழைப்பவர்கள் தினமான மே தினத்தில் ஏழை மக்களுக் அரிசி 5 கிலோ ,காய்கரிகள் மளிகை பொருட்களை, கல்லூரி இளைஞர்களால் நடத்தப்படும் விடியல் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.

அறக்கட்டளை நிறுவனர் மதிவாணன் தலைமையில் , மலைராசு முன்னிலையில் நிர்வாகிகள் 50 க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கினார்கள், அனைவரும் முக கவ?சம், கையுறை அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து வழங்கினார்கள். மேலும் கொரொனா வைரஸ் தாக்கத்தை பற்றியும், அதனால் ஏற்படும் கடும் பேரழிவு தாக்கத்திலிருந்து விடுபட நாம் ஒவ்வொருவரும் சமூக இடைவெளியை கடைபிடித்தும், வீட்டை உட்டு வெளியில் வராமல் இருக்க தங்களை இந்த கொடிய வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்கள். இந்த நிகழ்வில் சமூக ஆர்வளர்ள் ராஜசரவணன், சந்திர சேகர், ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொள்ண்டார்கள்.







