துப்பாக்கியுடன் சுற்றுலா வந்த இளைஞர்கள்..!
நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த தேவாலா பகுதிக்கு சுற்றுலா வந்த கேரளா பயணிகளிடம் இருந்து துப்பாக்கி மற்றும் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கேரள மாநிலம் எர்ணாகுலத்தை சேர்ந்த மூன்று பேர் கூடலூர் சுற்றுலா வந்ததும் அங்கே வந்து பறவைகளை வேட்டையாடத் திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் வந்த காரை கைப்பற்றிய காவல் துறை மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகிறது.






