மயான வசதி இல்லாமல் அவதிப்படும் மக்கள்..!
விருதுநகர் காரியாபட்டி அருகே மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். காரியாபட்டியில் 5-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி இல்லாமல் மக்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். சடலத்தை பெரும் சிரமத்திற்கு இடையே தூக்கிச் சென்று உறவினர்கள் அடக்கம் செய்தனர்.
மேலும் அந்த நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மயானத்திற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.






