--- --:--:-- --

ஆழ்துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவியை கண்டுபிடித்துள்ள இளைஞர்

14

ஆழ்துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்பதற்காக இளைஞர் ஒருவர் புதிய கருவியை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே ரங்கசாமி புரத்தை சேர்ந்த முருகன் என்ற இளைஞர் ஆழ்துளை கிணறுகளில் விழுந்த குழந்தைகளை மீட்கும் எளிய கருவியை கண்டுபிடித்துள்ளார்.

 

இதில் கம்பிகளின் வழியாக சுலப முறையில் சைக்கிள் செயின் ராடு உதவியோடு ஆழ்துளை கிணற்றில் இறக்கி ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மேலே கொண்டு வர முடியும் என தெரிவித்துள்ளார். செய்முறை விளக்கத்திற்காக பொம்மையை குழிக்குள் இறக்கி அக்கருவி மூலம் தூக்கியும் காட்டியுள்ளார். இந்த கருவியை செய்வதற்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவானதாக அவர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon