தமிழகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு அஞ்சலி
கல்லறை தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மறைந்த முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கல்லறைத் திருநாள் கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் நவம்பர் 2ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி புதுச்சேரியில் உள்ள கல்லறைத் தோட்டங்களுக்கு சென்று கிறிஸ்தவர்கள் அங்கு கல்லறைகளுக்கு முன் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனைகள் செய்தனர். புதுவையில் உள்ள பெரிய கல்லறை தோட்டத்தில் ஏராளமானோர் வந்திருந்து தங்கள் முன்னோர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கல்லறை தினத்தையொட்டி கல்லறை தோட்டத்தில் வட்டார அதிபர் சகாயராஜ் தலைமையில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டு கிறிஸ்தவர்கள் உயிரிழந்தவர்களுக்கு பிடித்தமான உணவுகளை வைத்து வழிபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




