தனிமை முகாமில் இருந்து தப்பி ஓடிய இளைஞர்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தனிமைப்படுத்தப்பட்ட வார்டிலிருந்து கதவை உடைத்து வெளியேறிய இளைஞரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
உளுந்தூர்பேட்டையை அடுத்த குமாரமங்கலம் அரசு மாதிரி பள்ளியில் சிறப்பு தனிமைப்படுத்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. கொரட்டூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் ,கோயம்பேடு காய்கறி சந்தையில் பணிபுரிந்த தொழிலாளி ஒருவர் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் கதவை உடைத்து விட்டு தப்பியோடினார். இதனை கண்ட அங்கு பணியில் இருந்த காவல் துறையினரும் வருவாய்த் துறையினரும் மதில் சுவர் ஏறி குதிக்க முயன்ற அவரை பிடித்து மீண்டும் தனிமை முகாமில் அடைத்தனர்.







