--- --:--:-- --

பாம்பை மீட்ட இளைஞர் பாம்பு கடித்து உயிரிழப்பு!

27

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே வலையில் சிக்கிய நல்ல பாம்பை மீட்டு இளைஞர் அந்த பாம்பு கடித்து உயிர் இழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீர்காழியை சேர்ந்த ராஜசேகர் மளிகை கடை நடத்தி வந்தார். இவரது கடைக்கு அருகில் வலையில் சிக்கிக் கொண்ட நல்ல பாம்பை கையுறை அணியாமல் வெறும் கையால் பிடித்து விட்ட போது அந்தப் பாம்பு அவரது கையில் கடித்தது.

 

இதனால் மயங்கிக் கீழே விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த பிறகு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிதம்பரத்திற்கு கொண்டுசெல்லும் வழியிலேயே ராஜசேகர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon