--- --:--:-- --

சென்னையில் கார் மோதி இளைஞர் பலி..!

6

சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற கார் மோதியதில் சாலையை கடக்க முயன்ற பல்லாவரம் சதீஷ் என்ற டேவிட் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் மடக்கிய நிலையில் அந்த காரை சதீஷ் உறவினர்கள் அடித்து நொறுக்கினர். கார் ஓட்டுனரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon