30 லட்சம் கொடுத்த பிறகும் இளைஞர் கொலை..! 11 போலீசார் சஸ்பண்ட்..!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பணத்திற்காக கடத்தப்பட்ட நபர் கொல்லப்பட்ட விவகாரத்தில் கான்பூர் எஸ்பி மற்றும் டிஎஸ்பி உட்பட 11 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கான்பூரில் ஆய்வகம் ஒன்றில் ஊழியராக இருந்த சஞ்சித் யாதவ் என்பவரை கடந்த மாதம் கும்பல் ஒன்று கடந்து சென்றது.
அவரை விடுவிக்க 30 லட்சம் ரூபாய் ரொக்கம் கொடுக்குமாறு விரட்டியதால் குடும்பத்தினர் போலீஸ் உதவியை நாடியுள்ளனர். அவரை காப்பாற்றி நகைகளை விற்று குடும்பத்தினர் பல பிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் கூறியபடி பணத்தை மூட்டையில் கட்டி போலீஸ் துணையுடன் பாலத்தில் இருந்து கீழே வீசியதாக கூறப்படுகிறது.
பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிய கும்பல் சஞ்சித் விடுவிக்கப்படாமல் இருந்ததால் பிரச்சனை சிக்கலானது. தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்ட கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் சஞ்சீவை கொன்று ஆற்றில் வீசிய அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
இந்த பிரச்சினையில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த புகாரியில் கான்பூர் எஸ்பி உட்பட 11 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் முன்னிலையில் கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதை உயர் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.







