கோயில் முன்பு பெட்ரோல் ஊற்றி கொளுத்திய விவகாரத்தில் இளைஞர் கைது..!
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முன்பு பெட்ரோலை ஊற்றி கொளுத்தியை சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் சென்னை அடுத்த அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த தீனதயாளன் என்பதும் மது போதைக்கு அடிமையாகி மனநல பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் கபாலீஸ்வரர் கோயில் வந்து பெட்ரோலை ஊற்றி கொளுத்தியதும் இவர்தான் என்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து கைது செய்தனர்.





