பல ஆண்களை ஏமாற்றிய இளம் பெண் கைது..!
கரூரில் திருமணம் செய்து கொள்வதாக பல ஆண்களை ஏமாற்றிய இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் எழவனூர் பகுதியை சேர்ந்த பைனான்சியரை இளம்பெண் கடந்த 2020 ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு தனது தாயை சந்திக்க செல்வதாக கூறிய கிருத்திகா வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளார். இதனால் பைனான்சியர் சின்ன தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் கிருத்திகா பணம் பறிக்கும் வகையில் ஜீவனாம்சம் அனுப்பினார்.
அவர் பல ஆண்களை ஏமாற்றியது அம்பலமாகி இருந்தால் நீதிமன்றம் கிருத்திகாவை கைது செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து கிருத்திகா மற்றும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





