பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி இளைஞரை தாக்கிய இளம் பெண் கைது..!
பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி இளைஞரை தாக்கிய இளம் பெண் உள்ளிட்ட 3 பேரை சென்னை குமரன் நகர் போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னையில் தனியார் ஹோட்டலில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு மேட்ரிமோனி இணையதளம் மூலம் கிருஷ்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இந்த பழக்கம் திருமண பேச்சு வரை சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இளம் பெண்ணிடம் இருந்து கோகுலகிருஷ்ணன் 1 லட்சத்திற்கும் மேல் பணம் பெற்றதாக தெரிகிறது.
இந்த நிலையில் இளம் பெண்ணுக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததையடுத்து கோகுலகிருஷ்ணன் அந்த பெண்ணிடம் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து சென்னை ஜாபர்கான்பேட்டையில் அந்த பெண்ணின் உறவினர் வீட்டில் வைத்து இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளம் பெண்ணின் உறவினர்கள் கோகுலகிருஷ்ணனை தாக்கியுள்ளனர் இதுகுறித்து கோகுலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் இளம்பெண் உட்பட 3 பேரை கைது செய்த குமரன் நகர் போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.
இளம்பெண்ணும் அவரின் உறவினர்கள் கோகுலகிருஷ்ணனை தாக்கும் வீடியோ பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







