--- --:--:-- --

ஓ.பி.எஸ் பெயரை பயன்படுத்தி மோசடி செய்த நபர்..!

6

திமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல் அமைச்சருமான ஓ பன்னீர் செல்வத்தின் பெயரை பயன்படுத்தி வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

கடந்த 2014ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த வங்கி ஊழியரான கமலக் கண்ணன் என்பவருக்கு மதன கோபால் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சகோதரி மகன் என்று கூறியுள்ளார். மேலும் கமலக்கண்ணன் இரு மகள்களுக்கும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி நாற்பத்தி நான்கு லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார்.

 

தலைமை செயலகத்திற்கு சென்று விசாரித்ததில் மதனகோபால் கொடுத்தவை போலியானது என்பது தெரியவந்தது.

 

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மதனகோபால் என்பவரை தீவிரமாக தேடி வந்தநிலையில் மதனகோபாலை தற்போது கைது செய்து அவரிடமிருந்து போலி அரசு முத்திரைகள் போலியான கடிதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Right Menu Icon