--- --:--:-- --

ஆன்லைன் ரம்மியால் உயிரைவிட்ட இளைஞர்..!

10

ன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் உயிரை மாய்த்துக்கொண்ட சோகம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை தாம்பரத்தை அடுத்த ஜெகஜீவன்ராம் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பிரியா.

 

இவர்களுக்கு 5 மாதங்களே ஆன ஆண் குழந்தை உள்ள நிலையில் முருகனுக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டு பழக்கம் அதிகம் இருந்ததாக தெரிகிறது. பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் தொல்லை தரவே மன உளைச்சலில் இருந்துள்ளார்.

 

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகன் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Right Menu Icon