கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓபிஎஸ்
கல்லூரி மாணவர்களுக்கு நேரடியாக இல்லாமல் ஆன்லைன் வாயிலாக செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டும் என தமிழக அரசை திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அவரது அறிக்கையில் செப்டம்பர் மாதம் முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டாலும் பெரும்பாலான கல்லூரிகளில் முறையாக தேர்வு நடைபெறவில்லை என்றும் பருவத் தேர்வை நேரடியாக நடத்த வேண்டும் என்ற அறிவிப்பு மாணவர்களின் மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரத்திலமுதல் அமைச்சர் உடனடியாக தலையிட்டு நேரடித் தேர்வு முறையை ரத்து செய்து ஆன்லைன் வாயிலாக தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.






