--- --:--:-- --

வாட்ஸ் அப் செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் கிடையாது..!

10

வாட்ஸ் அப் செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் கிடையாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. வாட்ஸ்அப் செயலி கொண்டு வந்த புதிய தனிநபர் தகவல் தொடர்பு விதிமுறைகளுக்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 

விசாரணையில் வாட்ஸ் அப் செயலி பயனர்களின் தகவல்களை வெளி நிறுவனங்களுக்கு வெளியிடுவது மிகவும் கவலை அளிக்கக் கூடியது என்று வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் செயலியை பயன்படுத்துவது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது என்று தெரிவித்தனர்.

 

இந்த செயலியை பயன் படுத்த வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். வாட்ஸப் பயனர்களின் தகவல்களை வெளி நிறுவனத்திற்கும் வழங்கக்கூடாது என உத்தரவிடுமாறு மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

வாட்ஸ்அப் செயலி புதிய விதிமுறைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா என கேள்வி எழுப்பியதோடு வாட்ஸ்அப் நிறுவனத்தின் மத்திய அரசு உரிய விளக்கங்களை பெற அவகாசம் வழங்கி விசாரணையை மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon