மாமல்லபுரத்தை இன்று இலவசமாக சுற்றிப் பார்க்கலாம்..!
உலக பாரம்பரிய தினத்தையொட்டி இன்று (ஏப்.18) மாமல்லபுரத்தை சுற்றுலாப் பயணிகள் இலவசமாக சுற்றிப் பார்க்கலாம். உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புராதன சின்னங்களை எவ்வித கட்டணமுமின்றி சுற்றிப் பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியதால் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.





