--- --:--:-- --

நடிகர் ஸ்ரீ எப்படி உள்ளார்? – இயக்குநர் லோகேஷ்

1

டிகர் ஸ்ரீ உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு கவலை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் பெற்றோர்களின் கருத்துகளை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நடிகர் ஸ்ரீ ராம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தரப்பிலிருந்து வெளியிடும் அறிவிப்பு. நடிகர் ஸ்ரீ தற்போது மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, சமூக வலைதளங்களிலிருந்து விலகி சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை நலம் விரும்பிகள், நண்பர்கள், ஊடகத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

 

அவர் தனது உடல்நலனில் கவனம் செலுத்தி மீண்டும் நலம்பெற அவரின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தவறான தகவல்களும், வதந்திகளும் எங்களை பாதிக்கிறது.ஸ்ரீயின் உடல்நிலை குறித்து தெரியாமல், தவறான தகவல்களையும், வதந்திகளையும் தவிர்க்குமாறு அனைத்து தரப்பு ஊடகத்தினரையும் கேட்டுக்கொள்கிறோம்.

 

அவரது உடல்நிலை தொடர்பான நேர்காணல்களையும், ஆட்சேபத்துக்குரிய கருத்துகளையும் ஊடக தளங்களில் இருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தனிப்பட்ட ஒருவரின் நேர்காணல்கள் மூலம் முன்வைக்கும் கருத்துகளை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். புரிதலுக்கும், அன்புக்கும், தொடர் ஆதரவுக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.

Right Menu Icon