--- --:--:-- --

மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலை – ஐநா எச்சரிக்கை

7

ரான் நாடு முழுவதும் போர் நடவடிக்கைகள் பரவி வருவதால், அங்கு மனிதாபிமானச் சூழல் மிகவும் மோசமடைந்து வருவதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

கடந்த மார்ச் 17 முதல் ஏப்ரல் 3 வரையிலான காலக்கட்டத்தில், விமான நிலையங்கள், மருத்துவமனைகள், குடியிருப்புப் பகுதிகள், சந்தைகள், பள்ளிகள், தொழிற்சாலைகள் மற்றும் கலாச்சார பாரம்பரிய இடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் பொதுமக்கள் உயிரிழப்பு கடுமையாக அதிகரித்துள்ளதாக அந்தக் குழு கூறியுள்ளது.(OCHA) அறிக்கையின்படி, போர் தொடங்கியதிலிருந்து மார்ச் 30 வரை ஈரானில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்: 2,100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

 

 

27,900-க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர். 38 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்தப் போரினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், போர் தொடங்கியதிலிருந்து ஏப்ரல் 1-ஆம் தேதி வரை, ஈரானில் 1,15,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களின் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது

Leave a Reply

Right Menu Icon