அக்டோபர் 26ல் கூடுகிறது உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு..!
கொரொனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து விவாதிக்க வரும் 26ஆம் தேதி உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு கூடுகிறது. கொடிய வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 12 தடுப்பூசி மருந்துகளை இந்திய அரசு மக்களுக்கு செலுத்தி வருகிறது.
ஆனால் கோவாக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கவில்லை. அந்த தடுப்பூசி தயாரித்து வரும் பாரத் பயோடெக் தங்கள் தயாரிப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்குமாறு தெரிவித்துள்ளது. இதுபற்றி உலக சுகாதார நிறுவனத்தின் உயர்நிலை கூட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக வரும் 26-ஆம் தேதி நிபுணர் குழு கூடி விவாதிக்க உள்ளது. இதைப் பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறுகையில் தடுப்பூசியை சோதனை கூறியுள்ளார். மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கச் செய்வதே எங்கள் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.






