மகளிர் உரிமைத் தொகை: பெண்களுக்கு அதிகாரமளிப்பது இந்தியாவிற்கு ஆதிகாரமளிப்பதாகும் – மாணிக்கம் தாகூர்
தமிழ்நாட்டில் அரசு செயல்படுத்தும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவி பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படுவது ஒரு முக்கியமான முன்னேற்றமாகும்.
இன்று மூன்று மாதத் தொகையை முன்கூட்டியே வழங்கி, கூடுதல் ரூபாய் 2000 உதவி வழங்கியிருப்பது அந்த குடும்பங்களின் பொருளாதாரத்தில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கினை உணர்த்துகிறது.
பெண்களை அதிகாரமளிப்பது இந்தியாவை அதிகாரமளிப்பதாகும். இந்த முயற்சிகள் தொடர்ந்து வலுப்பெறட்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.





