இயலாமையை மறைக்க ஏ டீம், பி டீம் என்று சொல்கிறார்கள் – விஜய் பேச்சு
சேலம் சீலநாயக்கன் பட்டியில் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், விசில் சின்னத்துக்கு ஓட்டு போட வேண்டும் என குழந்தைகள் அவர்களின் பெற்றோரிடம் சொல்ல வேண்டும். நன்றி கடன் செலுத்தவை அரசியலுக்கு வந்தேன் என்று கூறினார்.
“மற்ற கட்சிகளை அழிக்கவும் ஒழிக்கவும் வெறுப்பு அரசியல் செய்வதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை” என்று கூறிய விஜய், அவர்கள் இயலாமையை மறைக்க ஏ டீம், பி டீம் என்று சொல்கிறார்கள்.
அனுபவம் இல்லாதவர்களால் எப்படி ஆட்சி நடத்த முடியும் என்று கேட்கிறார்கள், அதிகாரத்தில் இருந்து கொள்ளையடித்ததை தவிர அவர்களுக்கு வேறு என்ன அனுபவம் உள்ளது என்று விஜய் கேள்வி எழுப்பினார்.





