--- --:--:-- --

பெண்களின் ஜன்தன் கணக்குகளில் திங்கள் முதல் ரூ.500 செலுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

1

ஏழைகளுக்கான நிதி உதவியாக பெண்களின் ஜன்தன் கணக்குகளில் 500 ரூபாய் செலுத்துவது திங்கள் முதல் தொடங்கும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரொனாவால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பெண்களின் ஜன்தன் வங்கி கணக்குகளில் மாதம் 500 ரூபாய் என்கிற கணக்கில் மூன்று மாதங்கள் செலுத்தப்படும் என மார்ச் மாதத்தில் மத்திய அரசு அறிவித்தது.

 

அதன்படி ஏப்ரல் மாதம் முதல் தவணையாக 20 கோடியே 5 லட்சம் பேரின் கணக்குகளில் மொத்தம் 10 ஆயிரத்து 25 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. மே மாதத்திற்கான 500 ரூபாய் செலுத்தும் பணி திங்களன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 0, 1 ஆகிய எண்களில் முடியும் கணக்குகளுக்கு திங்களன்றும், 2, 3 என்ற எண்களில் முடியும் கணக்குகளுக்கு செவ்வாய் அன்றும் பணம் செலுத்தப்படும்.

 

இதேபோல் மற்ற எண்களில் முடியும் வங்கி கணக்குகளுக்கு அடுத்தடுத்த நாட்களில் பணம் செலுத்தி வெள்ளிக்கிழமைக்குள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon