--- --:--:-- --
9

பெண்களை பாலியல் ரீதியாக மயக்கி உடனிருந்து பணம் பறித்த வழக்கில் காசி சிக்கியதை போலவே இன்னொரு இளைஞர் அறந்தாங்கியில் சிக்கியுள்ளார். முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் டாக்டர் பெண்களை குறி வைத்து தனது கட்டுடல் மற்றும் நுனி நாக்கில் ஆங்கில மூலம் வீழ்த்தி தற்போது கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார் நாகர்கோவிலை சேர்ந்த காசி. 26 வயதான காசியைப் போல தற்போது அறந்தாங்கியில் 23 வயதான இளைஞர் சிக்கியுள்ளார்.

 

தற்போது சிக்கியுள்ள இவரது பெயர் முகமது அப்சல். முகநூல் வாட்ஸ் அப் மூலம் காசி பாணியில் பேசி பேசியே பல பெண்களை மோசடி செய்துள்ளதாக கூறுகின்றனர். போலீசில் அப்சல் சிக்கியது எப்படி? புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோபால சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் 23 வயதான முகமது அப்சல் திருமணம் ஆகாதவர். கேட்டரிங் முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றுவதும் மாட்டு வண்டி பந்தயத்தில் கலந்து கொள்வதுமாக நேரத்தை கழித்து வந்தார்.

 

முகநூல் மூலமாக தனியாக இருக்கும் பெண்களுக்கு நூல் விடும் முகமது அப்சல் அவர்களிடம் பேசி நைசாக மொபைல் எண்ணை வாங்கியுள்ளார். பின்னர் அவர்களிடம் வாட்ஸ்அப் குறுஞ்செய்தி மூலம் வசீகர வார்த்தைகள் பேசி வலை விரிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். வலையில் விழுந்த பெண்களின் வீடுகளுக்கு செல்வதும் பின்னர் அவர்களிடம் உள்ள நகை பணத்தை அபகரித்துச் வாழ்க்கை வாழ்வதாக இருந்து வந்துள்ளார்.

 

சென்னையில் திருமணம் ஆகாத அரசு மருத்துவமனை பெண் ஊழியர் காரைக்குடி மதுரை அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் பல பெண்களை தனது வலையில் வீழ்த்தி உள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அறந்தாங்கியை சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். அந்தப் பெண்ணோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டர்.

 

அவரது கணவர் வெளிநாட்டில் சம்பாதித்த அனுப்பிய நகை பணம் உள்ளிட்டவற்றை ஆசை வார்த்தை பேசி அவதரித்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தப் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்ப உள்ளதால் தான் கொடுத்த நகை மற்றும் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். பணம் நகையை தரமுடியாது என்றும் தொடர்ந்து வற்புறுத்தினார்.

 

கணவரிடம் கூறி விடுவேன் எனவும் முகமது அப்சல் அந்த பெண்ணை மிரட்டி உள்ளார். அவருக்கு பயந்த அந்த பெண் தொடர்ந்து பணத்தை திருப்பித் தருமாறு கேட்டு வந்துள்ளார். ஆத்திரமடைந்த அந்த பெண்ணுடன் பேசிய உரையாடல் பதிவை வெளிநாட்டிலுள்ள அந்த பெண்ணின் கணவருக்கு அனுப்பியுள்ளார். கணவன், மனைவிக்குள் தகராறு தொடங்கியுள்ளது.

 

இதையடுத்து அந்தப் பெண் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதன் மீது புகார் அளித்தார். அவரை பிடித்த போலீசார் விசாரித்த போது அந்த பெண் மட்டுமின்றி மேலும் இரு பெண்களிடம் பணம் பறிப்பதும் ஒப்புக்கொண்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon