--- --:--:-- --

இன்ஸ்டாகிராமில் தொடங்கிய காதல்! காதலி பிளாக் செய்ததால் இளைஞர் தற்கொலை!

8

திருச்சியில் இன்ஸ்டாகிராமில் ஊரடங்கு தொடங்கியபோது ஆரம்பித்த காதல் ஊரடங்கு முடிவதற்கு முன்பாகவே தோல்வியில் முடிந்ததால் மனமுடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்டுள்ளான். போலீசார் எச்சரிக்கை என்ன?

 

இன்ஸ்டாவில் காதலித்த பெண் கை விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆனந்தகுமார் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட அவரது உறவினர்கள் ஆறுதல் கூறித் தேற்றினார். இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு மாமா வீட்டிலேயே ஆனந்தகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

இதுகுறித்து குமாரின் உறவினர்கள் அளித்த தகவலையடுத்து திருவரம்பூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனந்தகுமாரின் செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 

இன்ஸ்டா கணக்கு மூலம் பழகியவர் உண்மையிலேயே பெண் தானா அல்லது பெண் பெயரில் செயல்பட்ட போலியான நபரா எதற்காக ஆனந்தகுமார் உடன் இன்ஸ்டாகிராமில் நீண்டநேரம் உரையாடினார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

சமூக வலைதளங்களில் முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களை முழுமையாக நம்பி நட்பு, காதல் வலையில் சிக்க வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கின்றனர்.

Leave a Reply

Right Menu Icon