--- --:--:-- --

முப்படை தளபதிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை..!

10

சீன எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையில் 3 படைகளின் தலைமைத் தளபதிகளும் பங்கேற்றனர்.

 

இதனை தொடர்ந்து ராணுவ தலைமை தளபதி எம்‌எம் நரவானே நாளையும், நாளை மறுநாளும் ராணுவத்தின் முக்கிய உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய எல்லையில் சீனா தன் துருப்களை அதிகரித்து வரும் நிலையில் இன்று சந்திப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. லடாக் எல்லைப்பகுதியில் ஐந்தாயிரம் சீன துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன.

 

இதைத்தொடர்ந்து இந்தியாவும் கூடுதல் படைகளை அனுப்ப தொடங்கியுள்ளதுடன் தொடர் கண்காணிப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த வாரம் லடாக் பகுதிக்கு நேரில் சென்று தளபதி நரவானே ஆய்வு செய்து வந்தார்.

 

இதற்கிடையில் நேபாளமும், எல்லை பிரச்சனையை கிளப்பியுள்ளது. இந்த சூழலில் பேச்சுவார்த்தை வாய்ப்புகள் பாதுகாப்பு தயார்நிலை உள்ளிட்டவை குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon