--- --:--:-- --

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பெண்ணின் 2 கைவிரல்கள் துண்டானது..!

12

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வன விலங்குகளிடமிருந்து விளை நிலங்களை பாதுகாக்க வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பெண்ணின் கை விரல்கள் துண்டானது. மேல்பட்டி பகுதியை சேர்ந்த சந்திரா என்பவர் தனது விவசாய நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது மரத்தடியில் கிடந்த பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து பார்த்துள்ளார்.

 

கண்ணிமைக்கும் நொடியில் இந்த டப்பாவில் இருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியதில் சந்திராவின் இரண்டு கைவிரல்கள் துண்டானது. மேலும் கழுத்துப் பகுதியிலும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

விசாரணையில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தும் வன விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு என்பது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon