வடபழனி காவல் ஆய்வாளர் லஞ்சம் பெற்றதாக வீடியோ வெளியான நிலையில் பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை..!
லஞ்சம் பெற்றதாக வீடியோ வெளியான நிலையில் சென்னை வடபழனியில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளர் கண்ணன் வடபழனி பகுதியில் பணம் வசூலிப்பது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்நிலையில் அவரை கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடை மாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். தனிப்பட்ட கொடுக்கல், வாங்கலை சிலர் சித்தரித்து அவதூறு பரப்புவதாக ஆய்வாளர் கண்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.







