--- --:--:-- --

கோயில் கூட்டத்தில் செல்போன் திருடிய பெண்! கையும், களவுமாக பிடித்த போலீஸ்

1

சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்டு செல்போன் திருடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனை பயன்படுத்தி கூட்டத்தில் இருந்த பெண் அங்கு இருந்த ஒருவரின் தோல் பையை திறக்க முயன்றுள்ளார்.

 

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் அந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் கல்பாக்கத்தை சேர்ந்த சருமு என்றும், கோவிலில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon