--- --:--:-- --

நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தைப்புலி தாக்கியதில் பெண் காயம்..!

4

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் புகுந்த சிறுத்தை புலி தாக்கியதில் பெண் தொழிலாளி ஒருவர் காயமடைந்துள்ளார். குன்னூர் அருகே உள்ள கோடை மழை எஸ்டேட் பகுதியில் வசித்து வரும் மேகலா என்பவர் அட்டப்பாடி பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது சிறுத்தைப்புலி ஒன்று திடீரென அவரை தாக்கியது.

 

அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்றதால் சிறுத்தை புலி தப்பி ஓடிவிட்டது. சிறுத்தை புலி தாக்கியதில் கை மற்றும் காலில் படுகாயம் அடைந்த மேகலாவை சக தொழிலாளர்கள் மற்றும் உறவினர்கள் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

 

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அட்டப்பாடி பகுதியில் சமீப காலமாக ஊருக்குள் நுழையும் இந்த சிறுத்தை புலியை உடனே கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon