--- --:--:-- --

மதுரையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் காரில் கடத்தப்பட்ட சம்பவம்..!

8

துரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை காரில் கடத்தி சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பெரிய ஊர் சேரி பகுதியை சேர்ந்த லேப் டெக்னீசியன் ஆன சங்கீதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் வருகிற 30-ஆம் தேதி திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில் புதன்கிழமை இரவு பணி முடிந்து சகோதரனுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த சங்கீதாவை காரில் வந்த மர்ம கும்பல் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. கடத்தப்பட்ட பெண்ணை உடனடியாக மீட்க கோரி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

 

இதனுடைய மாவட்டம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்தி கடத்தல் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon