--- --:--:-- --

இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் உடல் திருச்சியில் அடக்கம்..!

9

கொரொனா காரணத்தினால் உயிரிழந்த இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் உடல் திருச்சியில் அடக்கம் செய்யப்பட்டது. சென்னையில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்த ராம கோபாலனின் உடல் திருச்சி சீரா தோப்பு பகுதியில் உள்ள பாரதியார் குருகுலத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

 

அவரது உடலுக்கு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். கொரொனா தொற்றால் உயிரிழந்ததால் அருகில் சென்று அஞ்சலி செலுத்த யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து பாரதியார் குருகுல வளாகத்திலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 

Leave a Reply

Right Menu Icon