பாலியல் புகார் விசாரணைக்காக இயக்குனர் அனுராக் கஷ்யப் ஆஜராகியுள்ளார்..!
பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்காக இயக்குனர் அனுராக் கஷ்யப் மும்பை வெர்சோவாவில் உள்ள காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார். நயன்தாரா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான இமைக்காநொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இயக்குனர் அனுராக் காஷ்யப்.
இவர் மீது பாயல் கோஷல் என்ற நடிகை பாலியல் புகார் தெரிவித்திருந்தார். 2014 ஆம் ஆண்டு பாம்பே வெல்வெட் என்ற இந்தி திரைப்படத்தில் படப்பிடிப்பின்போது கஷ்யப் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குற்றம் சாட்டி இருந்தார்.
இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக கோரி அனுராக் காஷ்யப்பிற்கு மும்பை காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதனையடுத்து வெர்சோவா நகரில் இருக்கும் காவல் நிலையத்தில் அனுராக் காஷ்யப் ஆஜரானார். அவரிடம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.






