தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் பெயர் மாற்றமா..?
Dhanush At The 'Asuran' Success Meet
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்களுக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவனும் தனுஷும் மீண்டும் புதிய படத்தில் கை கோர்க்கிறார்கள். இந்த படத்திற்கு நானே வருவேன் என்று பெயர் வைத்திருப்பதாகவும் கூறப்பட்டது.
படப்பிடிப்பு அடுத்த மாதம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் நானே வருவேன் என்ற பெயரை மாற்ற வேண்டும் என செல்வராகவனிடம் சிலர் வற்புறுத்தினர்.
இந்த நிலையில் திகில் கதைகள் உலக தாதாக்கள் முதலில் பயன்படுத்தும் திரைக்கதையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் படத்திற்கு ராயன் என்ற பெயரை வைக்க இருப்பதாகவும் செல்வராகவன் குறிப்பிட்டுள்ளார். பெயர் மாற்றம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.







