--- --:--:-- --

பள்ளிகள் செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படுமா?

22.1

பள்ளிகளை செப்டம்பர் மாதம் திறப்பது குறித்து மாணவர்களின் பெற்றோரிடம் கருத்துக்கள் கேட்ட பிறகு முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் .ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் கொரொனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பதில் அவசரம் காட்ட முடியாது. செப்டம்பரில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக மத்திய அரசு கடிதம் எழுதியிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

சூழ்நிலைக்கு ஏற்ப பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார். பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தப்பட்டு வருவதாக செங்கோட்டையன் கூறினார்.

 

14 தொலைக்காட்சிகள் மூலம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் கல்வி சேவை வழங்கப்பட இருப்பதாக அவர் கூறினார். 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் மற்ற வகுப்புகளுக்கு பாடபுத்தகங்கள் அடுத்தடுத்து வினியோகம் செய்யப்படும் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon