கொரொனா மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில் பள்ளிகள் திறப்பா?
அமெரிக்காவில் கொரொனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து இருக்கும் நிலையில் பள்ளிகளை திறக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கல்வித்துறை அமைச்சர் பள்ளிகளுக்கு செல்வதால் குழந்தைகளுக்கு ஆபத்து என எந்த ஒரு தரப்பும் கூறவில்லை.
எனவே பள்ளிகள் திறப்பை ஊக்குவிக்க வேண்டும் என கூறுகிறார். ஆனால் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்படும் என்றும், மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து அவர் கூறவில்லை. கொரொனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் நிலையில் கல்வித்துறை அமைச்சர் பள்ளிகளை திறக்க வேண்டும் எனக் கூறியிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.







