--- --:--:-- --

ஆண் நண்பருடன் சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம்..!

7

டலூர் மாவட்டத்தில் ஆண் நண்பருடன் சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குறிஞ்சிப்பாடி அடுத்த முருகன் வீட்டருகில் இரவு நேரத்தில் தடுக்கி விழுந்து இறந்து விட்டதாக அவரது மனைவி அழுது புலம்பியுள்ளார்.

 

முருகனின் உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். வனஜாவிடம் போலீசார் விசாரித்த போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமாருக்கும் ஐந்து வருடங்களாக தகாத உறவு இருந்து வந்தது தெரியவந்தது.

 

கிருஷ்ண குமாரிடம் தோட்டத்தில் தனிமையில் இருந்த போது அவர்களை கையும் களவுமாக பிடித்து விட்டதாகவும் அப்போது ஏற்பட்ட மோதலில் இருவரும் சேர்ந்த முருகனின் கழுத்தை வேட்டியால் நெரித்து கொலை செய்து விட்டு அவர் தடுக்கி விழுந்து உயிரிழந்ததாக நாடகம் ஆடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கிருஷ்ணகுமாரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon