--- --:--:-- --

ஜன நாயகன் லீக் : விஜய் ஏன் பேசவில்லை? – ஹெச்.வினோத் விளக்கம்

4

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இது தொடர்பாக இயக்குநர் ஹெச்.வினோத் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஜனநாயகன் படத்துக்கு நிறைய தடைகள் இருந்தது. நிறைய பிரச்சினைகள் இருந்தது. இறுதியாக படம் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும்.

 

 

இந்தப் படத்துக்கு அநீதி நடந்துள்ளதா என்பது மக்களுக்கு தெரியும். அதற்காக அவர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.படத்துக்கு ‘ஏ’ சென்சார் கொடுக்கப்பட்டது எனக்கும், தயாரிப்பாளருக்கும் வருத்தம் தான். அதை எதிர்த்து சண்டையிடுவதற்கான நேரம் எங்களிடம் இல்லை. தற்போது படத்தை ரிலீஸ் செய்வது தான் எங்களுடைய நோக்கம். முதலில் ‘UA’ தான் கொடுத்தார்கள்.

 

 

தற்போது ‘ஏ’ கொடுத்துள்ளார்கள். அதை எதிர்க்க எங்களிடம் போதிய நேரமில்லை. விஜய் சார் மீது மக்கள் வைத்துள்ள மரியாதைக்கு நன்றி சொல்ல வேண்டும்.எத்தனையோ இயக்குநர்கள் இருக்கும்போது, என்னை விஜய் சார் ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதற்கு காரணம் ஒன்றுமில்லை. நிறைய இயக்குநர்கள் சாருக்கு கதை சொன்னார்கள். பெண்கள் முன்னேற வேண்டும் என்ற விருப்பம் விஜய்க்கு இருந்தது. அதனால் இந்த கதை அவருக்கு பிடித்திருந்தது. இந்தப் படத்தில் அவருக்கு பிடித்த பல விஷயங்கள் இருந்தது.

 

 

பகவந்த் கேசரி படத்தை பாதி எடுத்துக் கொண்டு, மீதியை நல்ல அரசியல் வைத்து பேசியிருக்கிறோம். தனிப்பட்ட சென்சார் அமைப்பு மீது நாம் எப்படி கோபம் கொள்ள முடியும். அவர்களால் மட்டுமே இது நடக்கவில்லை என நான் நினைக்கிறேன். அதனால் அவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை.” என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon