வாகன விபத்தில் கணவன் கண் முன்னே மனைவி பலி..!
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருச்சக்கர வாகன விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி பலியான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நாகர்கோவில் அடுத்த பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான செந்தில்குமார்.
தனது மனைவியுடன் செட்டிகுளம் அடுத்த மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பக்கவாட்டில் உரசியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.
அப்போது பேருந்தின் பின் சக்கரம் வளர்மதியின் மேல் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த செந்தில்குமார் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.







