--- --:--:-- --

தண்ணீர் குழாயில் இருந்து வெளிவந்த நெருப்பு..!

2

சீனாவின் பஞ்சிங் பகுதியில் உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்தவர் பென். இவர் அங்குள்ள குடியிருப்பு ஒன்றில் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமைப்பதற்காக தனது வீட்டுக்குள் அழைத்து வந்துள்ளார்.

 

அப்போது எதிர்பாராதவிதமாக லைட்டரை அதன் அருகே கொண்டுவந்து ஏறிய வைத்துள்ளார். தண்ணீர் வந்து கொண்டு இருந்த குழாயில் திடீரென நெருப்பு வர ஆரம்பித்துள்ளது. பின்னர் இதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டார்.

 

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றதையடுத்து குழாயில் நெருப்பு எப்படி வந்தது என்பது கண்டறியப்பட்டது. அதாவது தண்ணீர் வரத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட்டு இருப்பதைப் போன்று எரிவாயு வரத்திற்கும் குழாய்கள் அமைக்கப்பட்டு இருக்கும்.

 

அப்படி அமைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாய்கள் ஏதோ ஒன்றில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தண்ணீரோடு எரிவாயுவும் கசிந்துள்ளது. இதனால்தான் குழாயில் நெருப்பு வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Right Menu Icon