கணவனின் செல்போனை வேவு பார்த்த மனைவிக்கு அபராதம்..!
துபாயை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கணவனை அடிக்கடி வேவு பார்த்து வந்த பெண் கணவனின் செல்போனை எடுத்து போனிலிருந்து படங்கள் மற்றும் ரெக்கார்டிங் கை தனது குடும்பத்தினருக்கு ஷேர் செய்துள்ளார்.
இது கணவனுக்கு தெரிய வர மனைவியின் செயல்பாடுகளால் மனம் நொந்து போயுள்ளார். ஒருகட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாத கணவன் நீதிமன்றத்தில் தனது மனைவி தன்னுடைய அந்தரங்க விஷயத்தில் தலையிடுவதாக கூறி வழக்கு தொடர்ந்தார்.
மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக தனது பணிகளில் கவனம் செலுத்த முடியாமல் இருப்பதாகவும் தன்னுடைய மானத்தை இழந்ததாகவும் மேலும் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் கணவனுக்கு 5 ஆயிரத்து 400 திர்ஹம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று மனைவிக்கு உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த தம்பதி குறித்தான செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.






