12-ம் வகுப்பு பொது தேர்வு ரத்தா..? திங்கள் கிழமை விசாரணை..!
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்யக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் வரும் திங்கள் கிழமை விசாரிக்க உள்ளது.
சிபிஎஸ்சி பொதுத் தேர்வு நடத்தினால் மாணவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் தேர்வு ரத்து செய்யக்கோரியும் மாற்று வழியில் தேர்வு நடத்த உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது அனைத்து மாநிலங்களிலும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் இருந்து வருவதாக சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் வலியுறுத்தினார்.
திங்கள்கிழமை இந்த வழக்கின் விசாரணையின் போது சில தீர்வுகளை சொல்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். தேர்வு நடத்துவது குறித்து வரும் ஒன்றாம் தேதி சிபிஎஸ்இ நிர்வாகம் ஆலோசனை நடத்த இருக்கும் நிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.






