--- --:--:-- --

104 வயது கணவன் உயிரிழந்த சிறிது நேரத்திலேயே மனைவி உயிரிழப்பு

3

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 104 வயது கணவன் உயிரிழந்த சிறிது நேரத்திலேயே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆலங்குடி அருகே உள்ள குப்பகுடியை சேர்ந்தவர் வெற்றிவேல். 104 வயதான இவருக்கு 5 மகன்கள், ஒரு மகள், 23 பேரன்கள் மற்றும் கொள்ளுப் பேரன்கள் உள்ளனர். இந்நிலையில் வயது முதிர்வால் வீட்டில் இருந்து வந்த வெற்றிவேல் இன்று காலை திடீரென உயிரிழந்தார்.

 

இந்த செய்தியை கேட்டு நூறு வயதான அவரது மனைவி பிச்சாயி சோகத்தில் மூழ்கினார். வெற்றிவேலுக்கான இறுதி சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்று வந்த வேளையில் துக்கத்திலிருந்து பிச்சாயி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

 

100 வயதை கடந்து இணைபிரியாமல் வாழ்ந்த தம்பதி மரணத்திலும் பிரியாத நிகழ்வு அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon