--- --:--:-- --

மோடி ஏன் சீனாவின் பெயரை குறிப்பிட்டு பேசுவதில்லை? ப. சிதம்பரம் கேள்வி!

12

லடாக் சென்ற பிரதமர் மோடி சீனாவின் பெயரை குறிப்பிடாமல் பேசியது ஏன்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. லடாக் எல்லையில் நேற்று ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி சீனாவை மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அவரது உரையில் எந்த இடத்திலும் சீனாவின் பெயரையோ, அதிபர் ஜின்பிங்கின் பெயரையோ உச்சரிக்கவில்லை.

 

இது கடும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. சீனாவின் பெயரை குறிப்பிடுவதில் பிரதமர் மோடிக்கு என்ன தயக்கம் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சர்கள் கூட்டத்தில் உரை, தொலைக்காட்சியில் உரை, லடாக்கில் ஜவான்கள் மத்தியில் உரை என்று எந்த உரையிலும் சீனா என்று பிரதமர் மோடி குறிப்பிடவில்லையே.

 

இதன் மர்மத்தை யாராவது விளக்குவார்களா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்தது சீன துருப்புகளா அல்லது சந்திர மண்டலத்தில் இருந்து வந்த அந்நியர்களா என்று சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோருடனான பேச்சுவார்த்தையின் போது சீனா அத்துமீறல் குறித்து பிரதமர் மோடி குறிப்பிட்டாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon