பிரம்மாண்ட மீனை அசால்டாக தூக்கி சென்ற ராட்சச பறவை…!
அமெரிக்காவில் சுறா மீனை பிரம்மாண்டமான கழுகு போன்ற ராட்சதப் பறவை ஒன்று துடிக்கத் துடிக்கக் தூக்கிக்கொண்டு பறந்து சென்றது வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்தவாரம் அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள மேட்டில் பீச் பகுதியில் இருந்தவர்களுக்கு இந்த வினோத காட்சி தென்பட்டது.
அந்தப் பறவையின் இறுக்கமான பிடியிலிருந்து விடுபட துடித்த மீனின் போராட்டம் பயனற்று போனது. இந்த காட்சியை வீடியோ எடுத்து முகநூலில் வெளியிட்டவர் அந்த பறவை கழுகு கோனார் எனப்படும் பிரம்மாண்ட வகையாக இருக்கலாம் என பதிவிட்டுள்ளார்.







