--- --:--:-- --

ஜூலை 6 முதல் கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் என்னென்ன?

13.1

சென்னையில் வரும் திங்கள்கிழமை முதல் ஹோட்டல்கள், தேனீர் கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்டவை சில கட்டுப்பாடுகள், மற்றும் தளர்வுகளுடன் செயல்பட முதலமைச்சர் பழனிசாமி அனுமதி வழங்கியிருக்கிறார். கொரொனா பரவலை கட்டுபடுத்த சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமல் படுத்தப் பட்டிருக்கும் முடக்கம் நாளையுடன் முடிவுக்கு வருகிறது.

 

இந்நிலையில் திங்கள்கிழமை முதல் சில கட்டுப்பாடுகளுடன் கடைகள் உள்ளிட்டவை இயங்க முதலமைச்சர் பழனிசாமி அனுமதி வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

 

முன்னதாகர் 50 விழுக்காடு இருக்கைகளில் அமர்ந்து வாடிக்கையாளர்கள் உணர்வு கொண்ட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தேநீர் கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக கூறி இருக்கும் முதலமைச்சர் கடைகளில் அமர்ந்து டீ குடிக்க அனுமதி இல்லை எனவும் பார்சலுக்கு மட்டுமே அனுமதி என்றும் கூறியிருக்கிறார்.

 

காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள், பெரிய ஜவுளி மற்றும் நகைக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

 

கடைகளில் குளிர்சாதன வசதி இருந்தாலும் இயக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்ற செயல்பாடுகளை பொறுத்தவரை ஜூன் 19ம் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தில் அனுமதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் இயங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தொழில் நிறுவனங்கள் ஏற்றுமதி நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப் படுகிறது.

 

அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதி. அதே நேரத்தில் இயன்றவரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வாடகை மற்றும் டாக்சி வாகனங்கள், ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகளுடன் இயங்காலம். ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீன் கடைகள், இறைச்சி கடைகள் தனிமனித இடைவெளி கடைபிடித்து இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon