--- --:--:-- --

ஜனநாயகன் படத்தில் நடித்தது ஏன்? – அமைச்சர் அருண்ராஜ்

01

னநாயகன் படத்தில் நடித்ததற்கு என்ன காரணம்..? என்பது குறித்து அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.“முதலமைச்சர் விஜய், இது தான் தன்னுடைய கடைசி திரைப்படம் என அறிவித்துள்ளார். அந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவது மகிழ்ச்சி. மக்களை போல நாங்களும் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

 

 

முதல்வரின் கடைசி படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு நானே கேட்டேன். 6 மாதம் கழித்து என்னுடைய புகைப்படங்களை எல்லாம் வாங்கி நடிக்க வைத்தார்கள். கேமராவுக்கு முன் நடிக்க தொடங்கினால் முதல்வர் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். திரையரங்குகளுக்கு சென்று இந்தப் படத்தை பார்த்து மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

 

 

அரசியல் காரணங்களுக்கு தான் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. சிலர் இந்தப் படத்தை திருட்டுத்தனமாக லீக் செய்த நிலையில், மக்கள் திரைக்கு சென்று ஆதரவு தெரிவிப்பார்கள்.” என்றார். ஞாயிற்றுக்கிழமையில் கூட நாங்கள் மக்கள் பணிக்காக வேலை பார்த்திருக்கிறோம். இதை லீவு எடுத்து செய்கிறார்கள் என்று பார்க்க கூடாது.” என்றார்.

Leave a Reply

Right Menu Icon