--- --:--:-- --

டெல்லி போராட்டம் : நீட் தேர்வு ரத்தே நிரந்தர தீர்வு – மு.க.ஸ்டாலின்

10

புதுடெல்லியில் நடைபெறும் மாணவர்களின் போராட்டம் இப்போது ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நீட் தேர்வு பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று முதன்முதலில் எச்சரித்தது நாங்கள்தான். அதனால்தான் தி.மு.க ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது.

 

 

மேலும் அதனால் ஏற்படும் ஆபத்துகளையும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. சமூக நீதியைப் பாதுகாப்பதில் இந்தியாவிற்கே வழிகாட்டி, முதலாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு வழியமைத்த தமிழ்நாட்டின் ஒரே கோரிக்கை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான்.

 

 

 

வேறு எந்தக் கோரிக்கையையும் விட, நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதுதான் இந்த போராட்டங்களின் மையப் புள்ளியாக இருக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்வதன் மூலம் மட்டுமே இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon